உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 31,557 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

கடலூர்:

                     கடலூர் மாவட்டத்தில் 115 கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 31ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                              தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், சிதம்பரம்,  காட்டுமன்னார்கோவில், விருத்தசாலம், திட்டக்குடி, கடலூர், குறிஞ்சிப்பாடி மறறும் பண்ருட்டி வட்டங்களில் 115 கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது.

                         கடந்த 27ம் தேதிவரை 31557 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து வரும் நெல்லினை அன்றைய தினமே கொள் முதல் செய்வதற்கும் விவசாயிகள் சுத்தம் செய்து எடுத்து வரும் தரமான நெல்லாக இருப்பின் தூற்றிட தேவையில்லை என்றும் ஒரே ஊரில் ஒரு லோடுக்கு குறைவாக நெல் வைத்திருக்கும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து அது ஒரு லோடு இருக்குமேயானால் அது குறித்து அதன் விவரத்தினை 04144-238280 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது துணை மேலாளருக்கு 99940 83409 என்ற மொபைல் எண் ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் அருகில் உள்ள கொள்முதல் நிலையத்தின் மூலம் உடன் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கொள்முதலில் குறைபாடு இருப்பின் அதன் விவரத்தினை மேற்கண்ட தொலைபேசி எண்கறில் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior