உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

பயறு வகைகளில் கூடுதல் மகசூல் : டி.ஏ.பி., தெளிக்க பரிந்துரை

கடலூர்:

                   பயறு வகை பயிர்களில் டி.ஏ.பி., தெளிப்பதால் அதிகமான பூக்கள் உற்பத்தியாகி திரட்சியான மணிகளும், இதனால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும். 

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                   கடலூர் மாவட்டத்தில் பயறு வகை பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்காக வேளாண் துறை மூலம் டி.ஏ.பி., உரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எக்டேர் ஒன்றுக்கு இருமுறை தெளிப்பு செய்ய தேவையான 25 கிலோ டி.ஏ.பி., 200 ரூபாய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. பயறு வகை பயிர்களில் டி.ஏ.பி., தெளிக்க எக்டேர் ஒன்றுக்கு 12.5 கிலோ டி.ஏ.பி., உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே கரைத்து ஊற வைக்க வேண்டும.

                     மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து வடிகட்டி இத்துடன் 6.25 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை நேரத்தில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.பயிர்கள் பூக்கும் நிலையில் விதைப்பு செய்த 25ம் நாள் ஒரு முறையும் பின்னர் 15 நாள் இடைவெளி விட்டு 2ம் முறையும் டி.ஏ.பி., தெளிக்க வேண்டும். பயறு வகை பயிர்களில் டி.ஏ.பி., தெளிப்பதால் அதிகமான பூக்கள் உற்பத்தியாகி திரட்சியான மணிகளும், இதனால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும். எனவே, பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டத்தை பயன்படுத்தி டி.ஏ.பி., உரத்தை வாங்கி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior