பண்ருட்டி:
தமிழக முதல்வருக்கு கடலூர் தொழில் வர்த்தக சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கடலூர் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
வணிக வரித்துறை சார்பில் பட்ஜெட்டுக்கு முன்னர் நடைபெற்ற வணிக சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட 6 கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு, தமிழக முதல்வர், நிதி அமைச்சர், வணிக வரித் துறை அமைச்சர், செயலர் மற்றும் ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு கடலூர் மாவட்டத் தொழில் வர்த்தக சங்கத்தினர் சார்பில் நன்றி தெரிவிப்பதாக டி.சண்முகம் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக