பண்ருட்டி
பண்ருட்டி நகர திமுகவின் செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவைத்தலைவர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், 7-ம் தேதி விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி திறந்து வைக்க வரும் தமிழக முதல்வர் நிகழ்ச்சியில் நகர கழகம் சார்பில் பெரும் திரளாக கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பது, 6-ம் தேதி கடலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நகர எல்லையில், நகர கழகம் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது. மருத்துவத்துறையில் சாதனை படைத்து முதல்வரிடம் பாராட்டு பெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகரச் செயலர் கே.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துகிருஷ்ணன், செங்குட்டுவன், நகரத் துணைச் செயலர் சையத்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக