சிதம்பரம் :
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மே மாதம் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தொழில் முனைவோர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
சிதம்பரத்தில் தொழில் முனைவோர் அமைப்பு ஆலோசனைக் கூட்டம் அமைப்பாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. முருகப்பன், சண்முகம், அருண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கும் சிறு தொழில்களுக்கு மின்வெட்டை அமல்படுத்துவதை கண்டித்தும். மற்ற மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அந்த மாநிலங்களுக்கு பயன்படுவது போல் தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் தமிழகத்திற்கே வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி மே மாதம் 10ம் தேதி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மணிவண்ணன், சுப்ராயன், கதிரவன், சக்திவேல், பிரபாகரன், ரமேஷ், வேல்முருகன், துரைராஜ், விஜய், நாராயணன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவராஜன் நன்றி கூறினார்.
download this page as pdf