திட்டக்குடி :
திட்டக்குடி நகைக் கடைகளில் நடைபெறும் திருட்டை தவிர்க்க போலீசார் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.
போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் சம்பந்தம் வரவேற்றார். கூட்டத்தில், நகைக் கடைகளில் பக்ளர் அலாரம், 'டிவி' இணைப்புடன் வீடியோ கேமரா, பலமான கதவுகள், ஒருவழிப்பாதை, சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந் தால் உடன் தொலைபேசி எண் 100ல் தொடர்பு கொள்வது, திருட்டு நகைகளை பெறக் கூடாது, கடை வீதிகளில் புதியதாக செக்யூரிட்டி நியமிப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. நகைக் கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பாண்டியன், செயலாளர் சங்கர், பொருளாளர் ஐயப்பன், உப தலைவர் தயாளன், கிருஷ்ணமூர்த்தி, பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
downlaod this page as pdf