உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

புவனகிரியில் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' மக்கள் அவதிக்கு நிரந்தர தீர்வு எப்போது?

 புவனகிரி : 

                  புவனகிரி கடைத்தெரு பகுதியில் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஏற்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 
               நெய்வேலியிலிருந்து சிதம்பரம் வழியாக நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், கடலூரிலிருந்து வரும் வாகனங்களும் புவனகிரியை கடந்துதான் செல்ல வேண்டும். அதனால் தினமும், பஸ், லாரி, கார் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் புவனகிரி வழியாக செல்கிறது. ஆனால் இத்தனை வாகனங்கள் செல்லும் புவனகிரியில் விஸ்தாரமான சாலை வசதி இல்லை. இருக்கும் சாலையும் ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி விட்டது. அடிக்கடி சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் புவனகிரி கடைத் தெரு பகுதியில் நேருக்கு நேர் வாகனங்கள் வந்து விடுவதால் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior