உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி


நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிடும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்
நெய்வேலி:
 
              மிழகத்தில் 2700 மெகாவாட் மின்சார உற்பத்தி இழப்பு எப்படி ஏற்பட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
 
மின்வெட்டைக் கண்டித்து நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜெயலலிதா பேசியது:
 
                 அதிமுக ஆட்சியிலிருந்த 2006-ம் ஆண்டுவரை தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்னுற்பத்தியில் உபரி மாநிலமாகவும் தமிழகம் இருந்தது. 2006-ம் ஆண்டு தமிழகத்தில் 10 ஆயிரத்து 11 மெகாவாட் மின்னுற்பத்தி இருந்தது. இதை 2006-07 ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது மின்னுற்பத்தி 7 ஆயிரத்து 300 மெகாவாட்டாக உள்ளது. அதாவது 2 ஆயிரத்து 700 மெகாவாட் குறைந்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததாலும், சரியான நிர்வாகமின்மையினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தமிழக மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 
                       திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் தமிழகம் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது.1991-96-ம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் 1300 மெகாவாட் மின்னுற்பத்தி அதிகரித்தது. பின்னர் 2001-06-ம் ஆண்டு வரையிலான ஆட்சியின் போது கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது தமிழக அனல்மின் நிலையங்கள் சிறந்த பராமரிப்புக்கான தேசிய விருதுகளைப் பெற்றன. காற்றாலையில் தமிழகம் முதலிடம் வகித்தது.தமிழகத்தின் மின்வாரியப் பொருள்களை மறு மதிப்பீடு செய்ய ரூ.8 ஆயிரத்து 500 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.நிலக்கரி இறக்குமதியில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. எண்ணூரிலிருந்து மேட்டூருக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிலக்கரி, தற்போது எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் மேட்டூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக ஒரு டன்னுக்கு ரூ.485 செலவழிக்கப்படுகிறது. இந்த லாபம் கருணாநிதியின் குடும்பத்துக்கு போய்ச் சேருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழக மின்வாரியத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்படுகிறது. இப்போது கருணாநிதியின் கவனம் நிலக்கரி இறக்குமதியில்தான் உள்ளது. தமிழகத்தில் ஒரு அனல்மின் நிலையத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு 140 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அப்படியானால் 12 அனல்மின் நிலையங்களுக்கும், ஓர் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்தோனேசியாவில் இருந்து 2.1 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் 82 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலக்கரி 103 டாலருக்கு தமிழக மின்வாரியத்தால் வாங்கப்படுகிறது. 
 
                 இதன்மூலம் 1 டன்னுக்கு ரூ.1000 வரை கருணாநிதி குடும்பத்தினருக்குப் போய் சேருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் தனியார் அனல்மின் நிலையங்கள் மூலமாக கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அதன் மூலம் பல லட்சம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. திமுக அரசின் கையாலாகாததனத்தால் தமிழக மின்வாரியத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.வடசென்னை அனல்மின் நிலையம் கடந்த 40 தினங்களாக இயங்கவில்லை. இதன்மூலம் வருவாய் இழப்பு ரூ.70.56 கோடி. மின்வாரியத்தின் மோசமான செயல்பாட்டாலும், பராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும் தமிழக மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 522 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றார் ஜெயலலிதா.அதிமுக ஆட்சிக்கு வந்தால்...2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மின் பற்றாக்குறையைப் போக்குவதுதான், அரசின் முதல் பணியாக இருக்கும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒரு சில மாதங்களில், மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்படும். 24 மணி நேர மின்சாரம், தங்கு தடையின்றி அனைவருக்கும் அளிக்கப்படும் என்ற உறுதியை நான் இப்போது உங்களுக்கு வழங்குகிறேன்.மக்கள் நலன் காக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி 2011-ல் அமைந்தவுடன், மின் உற்பத்தியில் தமிழகம் நிச்சயம் மிகை மாநிலமாக விளங்கும் என்றார் ஜெயலலிதா.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior