கடலூர் :
அரசு விளையாட்டு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு ஒன்றிய அளவிலான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 1ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் இயங்கி வரும் 13 விளையாட்டு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் வரும் கல்வி ஆண் டிற்கு தடகளம், கூடைப் பந்து, கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி, நீச்சல், வாலிபால், குத்துச் சண்டை, டேக்வாண்டா விளையாட்டுகளில் ஆர் வம் உள்ள மாணவர்களும், தடகளம், கூடைப் பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கைப்பந்து, வாள் சண்டை மற்றும் நீச்சல் போட்டிகளில் ஆர்வம் உள்ள மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்காக ஒன்றியம், மாவட்டம் மற்றம் மாநில அளவுகளில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் உணவு, தங்குமிடம், விளையாட்டு சீருடை வழங்கி விளையாட்டுப் பயிற்சி அளிக் கப்படும். 13, 14, 15 மற்றும் 18 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒன்றிய அளவிலான தேர்வுகள் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 4ம் தேதிவரை நடக்கிறது. புதுப்பேட்டை, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளிகளில் 1ம் தேதி நடக் கிறது. கீரப்பாளையம் வடக்குப்பாளையம் சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி ஒன்றியங்களில் அந்தந்த பகுதி மேல்நிலைப் பள்ளிகளில் 2ம் தேதி தேர்வு நடக்கிறது. 3ம் தேதி எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி, தொழுதூர் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 4ம் தேதி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி, லால்பேட்டை அரசு பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர் ஒன்றியத்திற்கு அண்ணா விளையாட்டரங்கிலும் தேர்வு நடக்கிறது.
விளையாட்டு பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப் பம் பெற்று பூர்த்தி செய்து தங்கள் பகுதியில் போட்டிகள் நடக்கும் அன்று உரிய சீருடையுடன் பங்கேற்க வேண்டும். இதுபற்றி மேலும் தகவல் வேண்டுவோர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அல்லது போட்டிகள் நடக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
download this page as pdf