உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

நெய்வேலியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு

 நெய்வேலி:

                    நெய்வேலியில் நிறுவப்பட்டு 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். நெய்வேலிக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்த ஜெயலலிதா, வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலையைத் திறந்துவைத்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகேவுள்ள அண்ணா திடலில் மின்வெட்டைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்தினர். முன்னதாக முன்னாள் அமைச்சர் செம்மலை வரவேற்றார். மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் நன்றி கூறினார்.   ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், பி.எச்.பாண்டியன், மதுசூதனன், செங்கோட்டையன், முத்துசாமி, பா.வளர்மதி, மு.தம்பிதுரை, தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்திரன், பொன்னையன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு:

                     ஜெயலலிதாவுக்கு மாவட்ட அதிமுக, நெய்வேலி நகர அதிமுக, என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜெயலலிதாவுக்கு கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் நெய்வேலி விமானத் தளத்திலிருந்து ஆர்ப்பாட்ட மேடை வரையிலான சுமார் 6 கி.மீ. தூரம் வரை அதிமுக கொடிக் கம்பங்களும், டிஜிட்டல் பேனர்களும், பனை ஓலையிலான அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் தலைமையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உதயக்குமார், அபு, தட்சிணாமூர்த்தி, அதிமுக நகரச் செயலர் ரவிச்சந்திரன் மாவட்டப் பிரதிநிதி வெற்றிவேல், வி.சேகர், ஊ.மங்களம் சிவசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior