கடலூர் :
நூலகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் இலவசமாக வெளிநாடு சுற்றுலா சென்று வர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை, ஊர் புற பகுதி நேர நூலகங்களில் 'நூலகக் கோடை முகாம்' மே மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில், நமது உலகம் நூலகம் என்னும் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டில் வட்ட அளவிலான நூலகப் போட்டிகள் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வரும் மே 9ம் தேதி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி, 16ம் தேதி ஆங்கில எழுத்து நிரப்புதல் போட்டி, 23ம் தேதி கணித விளையாட் டுப் போட்டி, 30ம் தேதி பொது அறிவுப்போட்டி ஆகியன நடத்தப்படவுள்ளன.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இம்மாதம் ஏப்ரல் 30ம் தேதிக்குள் நூலகத்தில் உறுப்பினராக சேர வேண்டும். எனவே, பள் ளியில் பயிலும் மாணவ மாணவிகளை இப்போட்டியில் கலந்து கொள்ள செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை கடலூர் மாவட்ட நூலக அலுவலர் அசோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக் கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வரும் 2011ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் நூலகத்தில் உறுப்பினராக வேண்டும். அரசுப் பள்ளி, பிற பள்ளிகள் என தனித்தனியே நடத்தப்படும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் ஐரோப்பா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல் லப்படுவார்கள். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள அரசுப் பொது நூலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
download this page as pdf