சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் பாங்கை பகுத்தறியும் முறை மற்றும் ஆராய்ச்சி என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது. தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் கே.சீதாராமன் வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பயிலரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் பி.பழனியப்பன். திருச்சி அண்ணாபல்கலை முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். விரிவுரையாளர் எஸ்.விஜயபானு நன்றி கூறினார். மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் துறைத் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
downlaod this page as pdf