சேத்தியாத்தோப்பு :
சென்னிநத்தம் பகுதிக்கு தனி மயானம் மற்றும் மயானபாதை அமைத்து தர முதல்வருக்கு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி கிராம மக்கள் சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட சென்னிநத்தம் (தெற்கு) பகுதியில் சமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் பகுதிக்கென்று தனியாக மயான வசதி ஏதும் இல்லை. நீண்ட காலமாக எங்கள் பகுதியில் இறப்பவர்களை வெள்ளாற்றின் மைய பகுதியில் எரிப்பதும், கரையோர பகுதியில் புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. தற்போது கரையோர பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து விட்டதால் அங்கு வசிப்போர் பிணங்களை புதைக்கவும், வெள்ளாற்றில் எரிக்கவும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு தனியாக மயானமும், மயான பாதையும் அமைத்து தரவேண்டி பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் பலனில்லை. எனவே சென்னிநத்தம் பகுதிக்கு மயான வசதியும், பாதையும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.