உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

மூன்று ஒன்றியங்களுக்கு குடிநீர் வசதி என்.எல்.சி., நிர்வாகம் நிதி ஒதுக்கீடு

 கடலூர் : 

            கம்மாபுரம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களின் குடிநீர் வசதிக்காக என்.எல்.சி., நிர் வாகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
 
            கடந்தாண்டு முழு ஊரக சுகாதாரத் திட்டத்தில் தன் னிறைவு பெற்ற 47 ஊராட் சிகளின் தலைவர்களுக்கு மத் திய அரசின் 'நிர்மல் கிராம் புரஷ்கார்' விருது வழங்கும் விழா கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடந்தது. திட்ட இயக்குனர் ராஜஸ்ரீ வரவேற்றார். 

சுகாதார திட்டத்தில் தன்னிறைவு பெற்ற கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில, குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் மற்றும் மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 47 ஊராட்சிகளின் தலைவர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் மத்திய அரசின் 'நிர்மல் கிராம் புரஷ்கார்' விருது மற்றும் கேடயம் வழங்கி பேசுகையில், 

               'உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மக்களின் ஒத்துழைப்பால் முழு  சுகாதார திட்டத்தில் மாநிலத்தில் கடலூர் மாவட் டம் முதலிடம் பிடித்துள்ளது.  இத்திட்டத்தில் கடந் தாண்டு சிறப்பாக செயல் பட்ட 47 ஊராட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் 'நிர்மல் கிராம் புரஷ்கார் விருது' வழங்கப்படுகிறது. இதனை பின்பற்றி பிற ஊராட்சி தலைவர்களும் முழு சுகாதார திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஊராட்சி தலைவர்கள் குடிநீர் தடையின்றி வழங்க கவனம் செலுத்த வேண்டும். குடிநீர் வசதிக்காக போதிய நிதி உள்ளது. தற்போது கம்மாபுரம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த என்.எல்.சி., நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது' என பேசினார்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior