உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் விடியல் விழா! : இந்த ஆண்டு நடக்குமா என எதிர்பார்ப்பு


சிதம்பரம் : 

                சுற்றுலாத் தலமான பிச்சாவரம் கடற்கரையில் சூரிய தரிசன விழாவான 'விடியல் விழா' நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.
 
                 சுற்றுலாத் தலமான சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் இருப் பது சிறப்பு. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சிதம்பரம் வருகின்றனர். பிச்சாவரம் வன சுற் றுலா மையத்தையொட்டி அமைந்துள்ள சின்னவாய்க்கால் என்ற தீவு பகுதியில் இருந்து அதிகாலை சூரிய உதயத்தை துள்ளியமாக கண்டு களிக்கலாம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை சுற்றுலா மையமாக மாற்ற சுற்றுலாத்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
              இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு கலெக்டராக இருந்த ககன்தீப்சிங் பேடி மற்றும் சிதம்பரம் சப் கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூ ஆகியோர் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சென்றிருந்தபோது அதிகாலை சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அவர்கள், சுற்றுலா மையமாக்க  ஏற்ற இடமாக சின்னவாய்க்கால் உள்ளது என சுற்றுலாத் துறைக்கு பரிந்துரை செய்தனர். அதன் முதற்படியாக அந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி 'தில்லை வனத்தில் ஓர் விடியல்' என்ற சூரிய உதய தரிசன விழா நடத்தப்பட்டது.
 
                 அப்போதைய சுற்றுலாத் துறை கமிஷனர் சக்திகாந்த்தாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இங்கிலாந்து, தென் அமெரிக்கா, பிரான்ஸ், கென்யா, பிரேசில், சுவிஸ்லாந்து உள் ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமான சுற் றுலா பயணிகள் பங்கேற்றனர். அதிகாலை 5 மணிக் கெல்லாம் அந்த திட்டு பகுதிக்கு வந்த அதிகாரிகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் யோகா மற்றும் பின் னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் இசைச் கச்சேரியுடன் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
 
            இந்த சுற்றுலா மையத்தில் மாதத்தில் 2 முறையாவது சூரிய உதய நிகழ்ச்சி விழா நடத்த ஏற்பாடு செய்யப்படும் என சுற்றுலாத்துறை கமிஷனர் கூறினார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் ஏற் பட்ட சுனாமியால் விடியல் விழா முயற்சி கைவிடப்பட்டது. அதன் பிறகு 2008ம் ஆண்டு கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூ முயற்சியால் ஏப்ரல் 20ம் தேதி  விடியல் விழா கொண்டாடப்பட்டது. ஆனால் விழாவிற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என தெரிகிறது.
 
                  சுனாமிக்கு பின் மாவட்ட நிர்வாகம், கிள்ளை பேரூராட்சி, சுற் றுலாத்துறை சார்பில் விமர்சையாக நடத்தப் பட்ட விழா தொடர்ந்து நடக்கும் என சுற்றுலாப் பயணிகள் பெரிதும் எதிர் பார்த்தனர். ஆனால் கடந்த ஆண்டு விடியல் விழா நடத்த எவரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த ஆண்டாவது கண்டிப்பாக விடியல் விழா நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சுற் றுலா பயணிகள் காத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை முயற்சி எடுத்து விழா நடத்த முன் வர வேண்டும் என கோரிக் கையும் வைத்துள்ளனர்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior