ஸ்ரீமுஷ்ணம் :
தி.மு.க., அரசின் வருவாய் பெருகியுள்ள நிலையில் வருவாய் ஈட்டும் திட்டங்களுக்கு தொகையை ஒதுக்கீடு செய் யவில்லை என இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் தா.பாண்டியன் கூறினார்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குப்பாளையத்தில் விபத்தில் இறந்த விவசாய தொழிலாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வருகை தந்த இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் தா.பாண்டியன் கூறியதாவது:
அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை கடந்தும் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என தெரியவில்லை. அரசின் 'கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத்திற்கு தற்போதுள்ள விலைவாசி உயர் வின் காரணமாக ஒதுக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் ரூபாயில் வீடு கட்ட முடியாது. அதனை இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மின் பற்றாக்குறையை போக்க தமிழக அரசிடம் தற்போது எந்த திட்டமும் இல்லை. அரசின் வருவாய் தற்போது 66 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. கடனும் 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. இருந்தாலும் அரசாங்கம் உற்பத்திக்கான திட்டங்களுக்கு நிதியை ஒதுக்காமல் கேளிக்கைகளுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் நிதியை வீண் விரயம் செய்து வருகிறது.
தமிழகத்தில் வேரோடு அழிந்து வரும் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும். சட்டசபையில் பேச போதுமான நேரம் ஒதுக்காத போது மேலவை தேவையில்லை. அதிகாரமும், அடிப்படையும் இல்லாமல் மேலவையில் நடக் கும் விவாதங்கள் பட்டி மன்றமாகவே அமையும். விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் நாடு முழுவதும் வரும் 27ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும். முதல்வரை புகழ்ந்தால் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது தமிழகம் சென்று கொண்டுள்ளது. அனைத்தும் தெரிந்த முதல்வர் நிதியை ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு ஒதுக்குவதோடு, தமிழகத்தில் நடக்கும் கொலைகளையும் தடுக்க வேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
downlaod this page as pdf