உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

நெல்லிக்குப்பம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் தொடும் தூரத்தில் மின் ஒயர்: நடவடிக்கை தேவை


நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் சிறுவர்கள் தொட்டு விடும் உயரத்தில் மின் கம்பங்களில் 'பியூஸ்' கேரியர், மின் ஒயர்கள் தொங்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நெல்லிக்குப்பம்:

                     கீழ் பட்டாம்பாக்கம் தேசிய துவக்கப் பள்ளி வளாகம் அருகிலேயே தெரு விளக்குகளுக்கான சுவிட்ச் போர்டு உள்ளது. இதற்கு மூடியில்லாததோடு மிகவும் தாழ்வாக ஒயர்கள் தொங்குகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் தொடும் உயரத்தில் ஒயர்கள் உள்ளன. நெல்லிக்குப்பம் நகராட்சியில் தெரு விளக்குகள் பராமரிப்பு பணி  தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அலட்சியமாக செயல்படுவதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
                 மேலும் அதே பகுதியில் ராமர் கோவில் உட்பட பல இடங்களில் இதுபோன்ற சுவிட்ச் போர்டுகள் தாழ்வாக கைக் கெட்டும்  உயரத்தில் உள்ளது. விபத்துகள் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சேத்தியாத்தோப்பு: 

               பெரியக்குப்பம் கிராமத்தில் சாலையின் மைய பகுதியில் மின் கம்பத்தில் தரையிலிருந்து ஒரு அடி தூரத் தில் அந்த பகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கும்  'பியூஸ்' கேரியர் பெட்டி திறந்த நிலையில் காணப்படுகிறது. அப்பகுதியில் குடியிருப்பவர்கள் பல முறை பெட்டியை அகற்றக் கோரியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior