உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகரூ.12 லட்சம் மோசடி: சென்னை வாலிபர் கைது


கடலூர்: 

                வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 12 லட்ச ரூபாய் மோசடி செய்த சென்னை வாலிபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

                 சென்னை, மணலியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (30). ஐ.டி.ஐ., முடித்துவிட்டு சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், கிள்ளையை சேர்ந்த கோபால்சாமி மகன் கருணாகரன். இவரும், சுரேஷுடன் ஒரே இடத்தில் வேலை செய்து வருகிறார். அதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சுரேஷ் தமக்கு தெரிந்த கம்பெனியில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக பணம் கொடுத்தால் வாங்கித் தருவதாகவும் கூறினார். கருணாகரன் தன் தந்தையிடம் சகோதரருக்கு வெளி நாட்டில் வேலை வாங்குவதற்காக பணம் தயார் செய்யுமாறு கூறினார்.
 
                     கோபால்சாமி தனது மற்றொரு மகனான பெரியார் என்பவரின் வேலைக்காக சுரேஷிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அதேபோல அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமிருந்தும் வெளிநாட்டிற்கு அனுப் புவதாக கூறி முடசல்ஓடை சிவஞானம், இளையான்குடி, தாண்டவராய சோழகன்பேட்டை உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 12 பேரிடம், 12 லட்ச ரூபாய் பணம் பெற்று சுரேஷிடம் கொடுத்தார்.

                     ஆனால் சுரேஷ் சொன்னபடி வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்தார். சுரேஷ் சிங்கப்பூரிலேயே வேலை பார்த்ததால் பணத்தை கொடுத்துவிட்டு செய்வதறியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், 2008 ஏப்ரல் 19ம் தேதி கோபால்சாமி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் சென்னையில் உள்ள தூதரகத்தில் தகவல் தெரிவித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய சுரேஷை, தூதரக அதிகாரிகள் உதவியால், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டுகள் ராஜேந்திரன், பெருமாள் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior