உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

பாம்பன் பாலத்தின் தொழில்நுட்பத்துடன்கட்டப்பட்ட பாலம்; 15 ஆண்டுகளில் 'வீக்'

சேத்தியாத்தோப்பு: 
 
                       சேத்தியாத்தோப்பில் புதிய பாலம் கட்டப்பட்ட 15 ஆண்டுகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல வீனமடைந்து வருகிறது. சேத்தியாத்தோப்பில் வெள்ளாற்றின் குறுக்கே போக்குவரத்திற்காக பாம்பன் பாலத்தின் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட பாலம் கடந்த 95ம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டப்பட்ட 15 ஆண்டுகளிலேயே அனைத்து இணைப்புகளிலும் விரிசல் ஏற்பட் டுள்ளது.

                      ஆனால், தற்போது பக்கவாட்டு சுவர்கள் இணைப்பு பாலத்தின் தடுப்பு சுவர் பாலத்தின் பில்லர்களை இணைக்கும் தரை தளம் என பல இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. குறிப்பாக பாலத்தின் தென்புறத்திலிருந்து இரண்டாவது பில்லர் இணைப்பு சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் உடைப்பு காணப்படுகிறது.இதுபற்றி ஒவ்வொரு முறை சுட்டிகாட்டப் பட் டும் அதிகாரிகள் அவ்விடத்தில் தாரை காய்ச்சி ஓட்டையை அடைப்பதும் சில நாட்களில் தார் உருகி உருக்குலைந்து பெயர்ந்து விழுந்து மீண்டும் உடைப்பு அதிகமாவதும் தொடர்கிறது. பாலத்தின் உடைப்பு பகுதியில் பஸ், லாரி, கண்டெய்னர் வாகனங்கள் கடந்து செல்லும் போது பக்கவாட்டு நடைபாதை கட்டைகளில் நடந்து செல்பவர்கள் உயிர் பயத்தின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.

                         உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இருசக்கர வாகனங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் அந்த உடைப்பில் சிக்கி தடுமாறி விழுகின்றனர். ஆனால் பாலத்தை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலை துறையினர் அலட்சிய போக்கோடு செயல்படுகின்றனர். தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டுவதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டு தமிழக அரசு சேத்தியாத்தோப்பு பாலத்தை உரிய பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். இல்லையேல் பெரும் உயிரிழப்புகளையும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், அணைக்கரை, ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
 
downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior