உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிக்குவி.ஏ.ஓ., வரவில்லை: கிராம மக்கள் புகார்


பரங்கிப்பேட்டை: 

                  பரங்கிப்பேட்டை அருகே குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணிக்கு வி.ஏ.ஓ., வரவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதி திட் டத்திற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. பல இடங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த சிலம்பிமங்களம், நொச்சிக்காடு, ஆத்துமேட்டு காலனி, ரயிலடி, சின்னாண்டிக்குழி, சாமியார்பேட்டை ஆகிய கிராமங்களில் 508 குடிசை வீடுகள் உள்ளது.

                       இந்த ஊராட்சியில் கணக்கெடுக்க வி.ஏ.ஓ., மக்கள் நலப்பணியாளர், ஊராட்சி எழுத்தர் ஆகியோர் கடந்த மாதம் 29ம் தேதி கணக்கெடுக்கும் பணியை துவங்கினர். இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே வி.ஏ.ஓ., பணிக்கு வந்துள்ளதால் கடந்த 10 நாட்களில் 59 குடிசை வீடுகளை மட்டுமே கணக்கெடுத்துள்ளனர். இதனால் தினமும் மக்கள் நலப்பணியாளரும், ஊராட்சி எழுத்தரும் வி.ஏ.ஒ., அலுவலகத்திற்கு வந்து அவர் வராததால் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.குடிசை வீடு கணக்கெடுக்கும் பணிக்கு கலெக்டர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் வி.ஏ.ஓ., அலட்சியம் காட்டுவது கிராம மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior