சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து விமானம் மற்றும் வாகனத்தில் வெளியேறும் புகையை குறைப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று கையெழுத்தானது. கிங்பிஷர் அதிகாரி கிட்ஸ்சன் பட்டேல், மூத்த துணைத் தலைவர் ரான்நாகர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், பதிவாளர் சண்முகவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
துணைவேந்தர் மன்னர் ஜவகர், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு இந்த ஆண்டு முதல்கட்டமாக 1.5 லட்சம் விண்ணப்பம் அச்சடிக்கப்படும். தேவை அதிகமாக இருந்தால் ஒரு வாரத்தில் மேலும் விண்ணப்பம் அச்சடிக்கப்படும். மே 3 & ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே மையங்களில் விண்ணப்பங்களை பெறலாம். அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த 454 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 65 ஆயிரம் காலியிடம் உள்ளது. இதில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீடு இடங்கள், 35 சதவீதம் நிர்வாக இடஒதுக்கீடு இடங்கள். இந்தாண்டு மேலும் 12 ஆயிரம் இடம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.