கடலூர்:
கடலூர் - விருத்தாசலம் ரோட்டில் உள்ள பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் அருகே 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் உள்ளது. போக்குவரத்து மிகுந்த கடலூர்-விருத்தாசலம் ரோட்டில் ரயில் செல்லும் போது கேட் மூடப்பட்டால் பஸ்,லாரி, வேன், இரு சக்கர வாகனம் என அனைத்தும் இருபுறமும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ரயில் சென்ற பின் கேட் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டத்தின் கீழ் இந்த இடத்தில் ரயில்வே துறை மற்றம் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் உயர்மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.
downlaod this page as pdf