பாரீஸ்:
பூகம்பம் ஏற்படப் போவதை குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக தவளைகள் அறியக்கூடும் என்று பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரீசைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ரசெல் கிரான்ட் தலைமையிலான குழு, பூகம்பம் ஏற்படுவதற்கு முன் தவளைகளின் நிலை என்ன என்று ஆராய்ச்சி நடத்தினர். அது தொடர்பான அறிக்கை, ஜூவாலஜி ஜர்னல் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் ரசெல் கூறியயுள்ளதாவது:இத்தாலியின் லாகுய்லா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 300 பேர் பலியாகினர். 40,000 பேர் வீடிழந்தனர். அந்தப் பகுதியில் பூகம்பத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வசித்த தவளைகள், பூகம்பம் ஏற்பட்ட தினத்தில் ஒன்று கூட இல்லாமல் போயிருந்தன.அதை வைத்து தவளைகளுக்கு பூகம்பத்தை முன்கூட்டி அறியும் திறன் உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு நடந்தது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியில் இருந்து வெளியாகும் ஒருவித வாயு, துகள்களை வைத்து ஆண் தவளைகளால் பூகம்பத்தை கணிக்க முடியும் என அதில் தெரிய வந்தது. குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே ஆண் தவளையால் பூகம்பம் ஏற்படப் போவதை உணர முடியும். இதை வைத்து முன்கூட்டி பூகம்ப எச்சரிக்கை விடுக்க முயற்சிக்கலாம் என்றார். இதற்கு முன் நடந்த ஆராய்ச்சிகளில், பூகம்பத்துக்கு முன் புவியீர்ப்பு அலைகள் அல்லது ரேடியோஆக்டிவ் வாயு வெளிப்படுதல் ஆகியவற்றைக் கொண்டு பூகம்பம் ஏற்படப் போவதை முன்கூட்டி அறியலாம் என்று கூறப்பட்டது. எனினும், அதுபற்றி தெளிவான நிலை இல்லை. யானை, குதிரை, நரி, பாம்பு ஆகிய விலங்குகள் மூலம் ஆராய்ச்சிகள் நடந்தன.இந்நிலையில், தவளைகளால் பூகம்பத்தை முன்கூட்டி கணிக்க முடியும் என்ற ஆய்வு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
downlaod this page as pdf
0 கருத்துகள்:
கருத்துரையிடுக