உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

முந்திரியில் பருவம் தவறி பூ: விவசாயிகள் கவலை


பண்ருட்டி: 

                    முந்திரியில் பருவம் தவறி பூ வைத்துள்ளதால் உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி பகுதியில் ஆண்டு தோறும் முந்திரி மரங்களில் தை மாதம் பூக்கள் வைத்து பங்குனி மாதத்தில் முந்திரிகொட்டை வைத்து சித் திரை மாதம் அறுவடை செய்வார்கள். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு மாதம் தள்ளி பூக்கள் வைக்க துவங்கியுள்ளன.
                        கடந்த ஆண்டு பூக்கள் அதிகம் வைத்து பங்குனி மாதத்தில் பருவமழை மாறி பெய்ததால் பூக்கள் அழுகி முந்திரி காய்கள் காய்காமல் 50 சதவீதம் சேதமடைந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது தான் மரங்களில் பூக்கள் அதிகம் வைத்துள்ளது. இதன் பின் தான் பிஞ்சு வைத்து முந்திரி பழம் வைக்க வேண்டும். அதன் பிறகு அறுவடை செய்ய இயலும். பருவம் மாறி முந்திரி பூக்கள் வைத் துள்ளதால் முந்திரி உற்பத் தியில் குறைபாடு இருக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தற்போது பூக்கள் வைத்துள்ளதால் கோடையில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள நிலையில் மானாவாரி பயிராக உள்ள முந்திரி மரங்களுக்கு போதிய தண்ணீர் குறைவு காரணமாக காய்கள் அதிகளவு வராது. இதற்கு முந்திரி உற்பத்தியை பெருக்க வேளாண் விஞ்ஞானிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 
 
                   'முந்திரி மரங்களில் ஜனவரி, மார்ச், ஏப்ரல் மூன்று பிரிவுகளில் மரத்திற்கேற்ப பூக்கள் வைக்கிறது.

                      இதில் 100 பூக்களில் முதல் பிரிவில் 5 பெண் பூக்களும், 2ம் பிரிவில் 7 பெண் பூக்களும், 3ம் பிரிவில் 9 பெண் பூக்களும் இருக்கும். மற்ற ஆண் பூக்கள் கொட்டிவிடும். தற் போது பருவ நிலை மாறியுள்ளதால் உற்பத்தி ஒரு மாதம் தள்ளி சென்றுள்ளது. பூச்சியே இல்லாத முந் திரியில் மருந்துகளை அடிக்கக்கூடாது. பூச்சிகள் இருந்து மருந்து அடிக்க வேண்டுமானால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி புரோபனேபாசும், காப்பர் ஆசிட் குளோரைடு அரை மில்லியில் சூளை சாம்பல் தூளை மருந்தில் கலந்து அடித்தால் பூக்களில் பூச்சிகள் வராது கட்டுபடுத்தும். மகசூல் நன்றாக இருக்கும்' என்றார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior