உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

புதுச்சத்திரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு


பரங்கிப்பேட்டை: 

                           போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே மூன்று கடைகளின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பஸ் நிலையம் அருகே மெயின்ரோட்டில் 'டாஸ்மாக்' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று முன் தினம் இரவு மர்ம கும்பல் 'டாஸ்மாக்' கடை, ஜெராக்ஸ் கடை, செல் போன் ரீசார்ஜ் மற்றும் விற் பனை கடை ஆகியவற் றின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். 'டாஸ் மாக்' கடையில் பணம் ஏதும் இல்லாததால் இரண்டு குவாட்டர் பிராந்தி பாட்டில்கள், ஜெராக்ஸ் கடையில் 1,300 ரூபாய் பணம், செல் போன் கடையில் 1,800 பணம், இரண்டு செல் போன் மற்றும் ரீசார்ஜ் கூப்பன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

                 நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தவர்கள் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு திடுக்கிட்டனர். போலீசுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் டி.எஸ். பி., மூவேந்தன், இன்ஸ் பெக்டர்கள் புகழேந்தி, ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர். 

வியாபாரிகள் அச்சம்: 

                      புதுச்சத்திரம், பெரியப் பட்டு, பு.முட்லூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக கடைகளின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள் ளையடிக்கப்பட்டுள்ளது.  நேற்று புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் அருகிலேயே மூன்று கடைகளை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் வியாபாரிகளை அச்சமடைய செய்துள்ளது. கொள்ளை கும்பலின் இந்த செயல்பாடு போலீசுக்கு சவால்விடும் வகையில் உள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior