திட்டக்குடி:
மரம் வெட்டிய பிரச் னையில் ராமநத்தம் வி.ஏ.ஓ.,வுக்கு வழங்கப்பட்ட 'சஸ்பெண்ட்' உத்தரவு வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் வடக்கு தெரு புறம்போக்கிலிருந்த பழமையான புளியமரத்தை கடந்த 4ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (36) வெட்டினார். கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட வி.ஏ.ஓ., ராஜமாணிக்கம் வெட்டப்பட்ட புளிய மரத்தின் மதிப்பு, வெட்டிய நபர் குறித்த அறிக்கையை திட்டக்குடி தாசில்தாரிடம் தாக்கல் செய்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் சுந்தர்ராஜனை கைது செய்தனர். மரம் வெட்டிய பிரச்னையில் வி.ஏ.ஓ., ராஜமாணிக்கம் பணம் பெற்றதாக கிடைத்த தகவலையொட்டி விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் நேற்று வி.ஏ.ஓ., ராஜமாணிக்கத்தை 'சஸ்பெண்ட்' செய்து ஆர்.டி.ஓ., முருகேசன் உத்தரவிட்டார். ராஜமாணிக்கம் மற்றும் திட்டக்குடி தாலுகாவில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள் அனைவரும் நேற்று மாலை தாசில்தார் கண்ணனிடம் விளக்கம் கேட்டு 'சஸ்பெண்ட்' ஆர்டரை வாங்க மறுத்தனர்.கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோரை நேரில் சந்தித்து, தவறு செய்யாத நிலையில் 'சஸ்பெண்ட்' உத்தரவு வழங்குவதற்கன காரணம் மற்றும் உத்தரவினை திரும்ப பெற முறையிட உள்ளனர்.
downlaod this page as pdf