விருத்தாசலம்:
'கொளுத்தும்' வெயிலில் தெருத் தெருவாக நடந்து சென்று பொதுமக்கள் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
விருத்தாசலம் நல்லூர் அடுத்த நகர் ஊராட்சியில் இலவச டி.வி., வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் சீத்தாராமன் விழா முடிந்ததும் புறப்படுவதற்காக கார் இருக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 50ம் மேற்பட்ட இளைஞர்கள் கலெக்டர் சீத்தாராமனிடம் சென்று தங்கள் ஊர் தெருக்களில் கால்வாய் இல்லாததால் சாக்கடை தெருவில் ஓடுகிறது. சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் திருவிழா காலங்களில் சாமியை ஊர்வலமாக கொண்டு செல்ல முடியவில்லை. விளையாட்டு மைதானம் அமைத்துதரவேண்டும் என அடுக்கடுக்காக புகார் கூறினர். மேலும், நீங்கள் கண்டிப்பாக நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் சீத்தாராமன் மதியம் 1.15 மணிக்கு 'கொளுத்தும்' வெயிலில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் புடைசூழ தெரு தெருவாக நடந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் 'கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.
downlaod this page as pdf