உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி முடக்கம்! : ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட எருக்குழி வீண்


நெல்லிக்குப்பம்: 

                   நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 லட் சம் ரூபாய் மதிப்பில் கட் டப்பட்ட எருக்குழி எனப் படும் உரக்கிடங்கு பயன் பாட்டில் இல்லாததால் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி முடங்கிப் போனது.

                 நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேகரிக் கப்படும் குப்பைகள் கீழ் பட்டாம்பாக்கத்தில் உள்ள 'கம்போஸ்ட்' எனப்படும் குப்பை கிடங்கில் சேகரித்து வந்தனர். இது பல ஆண்டுகளுக்கு பிறகு குப்பையுடன் மனித கழிவுகளும் சேர்ந்து மக்கிய உரமாகும். விவசாயிகள் நிலத்துக்கு பயன்படுத்த போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாலித்தீன் பைகள் உபயோகப்படுத்துவதால் குப்பைகளில் பாலித்தீன் பைகளே உள் ளன. இதனால் குப்பைகள் மக்குவதில்லை. அப்படியே மலைபோல் குவிந்து வந்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சிகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மேல் பட்டாம்பாக்கம் பேரூராட்சி போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் குப் பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி முறையாக நடக்கிறது.

                      நெல்லிக்குப்பம் நகராட்சியில் இத்திட்டத் திற்காக மேல்பாதியில் இடம் வாங்கப்பட்டது. அங்கு 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் எருக் குழி எனப்படும் உரக் கிடங்கு கட்டப்பட்டது. அங்கு சிமென்ட் களம், தண்ணீர் வசதி, வாட்ச்மேன் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து லாரிகளில் கொண்டு செல்லும் குப்பைகளை அந்த இடத்தில் சேகரித்தனர். களம் முழுவதும் குப்பைகள் சேர்ந்தும் உரம் தயாரிக்கும் பணி பெயரளவிற்கு கூட துவங்கவில்லை.

                      இதன் காரணமாக தற் போது அங்கு மேற் கொண்டு குப்பைகளை சேகரிக்க இடமில்லை.இதனால் நகராட்சி ஊழியர்கள் கொண்டு செல்லும் குப்பைகளை மீண்டும் பழைய இடமான கீழ்பட்டாம் பாக்கத்திலும், சாலை ஓரங்களிலும் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.இதனால் புகை மண்டலம் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாக நேர்கிறது.இதற்கிடையே மேல்பாதியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள உரக்கிடங்கிற்கு 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்ட முன் டெண்டர் விடப்பட்டது. பணியை எடுத்த ஒப்பந்ததாரர் இரண்டு ஆண்டாகியும் பணியை துவக்கவில்லை. கடந்த நகரமன்ற கூட் டத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை செய்யாததால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அந்த பணத்தில் பொக்லைன் இயந்திரம் வாங்கலாம் என முடிவு செய்யப் பட்டது.அரசின் நல்ல திட்டங்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடைமுறைக்கு வராமல் போகிறது. உடனடியாக உரக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க முடியும்.

லாபம் மட்டுமே குறிக்கோள்...: 

                       ஒப்பந்ததாரர்கள் லாபம் வரும் பணி என தெரிந்தால் மட்டுமே அதிக தொகை கொடுத்து எடுத்து செய்கின்றனர். லாபம் வராது என தெரிந் தால் அப்பணியை செய்யாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நல்லது என நினைக்கின்றனர். பணி செய்யாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதைவிட அவர்களது அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்கள் எடுத்து செய்யும் பணியை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 'பர்சன்டேஜ்' கிடைத்தால் போதும் என நினைக்கின்றனர்

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior