கடலூர்:
முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்தல் தொடர்பான குழு ஆலோசனைக் கூட்டம் கடலூர் தொழிலாளர் அலுவலகத்தில் நடந்தது.
திருநெல்வேலி தொழிலாளர் துணை ஆணையர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கலந்துரையாடலுக்குப்பின் குழு உறுப் பினர்கள் கடலூர் மாவட்டத்தில் அமைந் துள்ள முந் திரி தொழிற்சாலைகளில் களப்பணி மேற்கொண்டனர். தற்போதுள்ள ஆலோசனைக்குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு களப்பணியை மேற்கொண்டபின் இறுதியாக ஆலோசனைக்குழு கூட்டம் நடத்தி அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் முந்திரி தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறு நிர்ணயம் தொடர்பான தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக வரும் 10ம் தேதிக்குள் கடலூர் தொழிலாளர் ஆய்வரிடமோ அல்லது திருநெல்வேலி-2, தொழிலாளர் துணை ஆணையரிடமோ தெரிவிக்கலாம் என குழு தலைவர் சுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
downlaod this page as pdf