கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசி வருவதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர். கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக பூமாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. போர்ட்டிகோவில் இருந்து முதல் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ள 'பாத்ரூமை' பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கும் எழவில்லை.இதனால் அலுவலகத்திற்குள் நுழையும் போதே சிறுநீர் நாற்றம் குடலை புரட்டி எடுக்கிறது. அலுவலகத்திற்கு உள்ளே செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி பகுதிகளில் கிராம மக்களுக்கு சுகாதாரத்தை கற்றுக் கொடுப்பவர்களின் அலுவலகமே இந்த லட்சணத்தில் இருந்தால் கிராமப் பகுதிகளில் சுகாதாரம் பற்றி எண்ணிப்பார்க்க முடியவில்லை.
downlaod this page as pdf