உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி


விருத்தாசலம்: 

                   கருவேப்பிலங்குறிச்சியில் பஸ்கள் நின்று செல்லும் மூன்று இடங்களிலும் நிழற்குடை இல்லாததால் பயணிகள் நிற்க இடமின்றி கடும் வெயிலில் தவித்து வருகின்றனர்.
 
                விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை மையமாக கொண்டு30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியினர் விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், திட் டக்குடி, பெண்ணாடம் போன்ற ஊர்களுக்கு கருவேப்பிலங்குறிச்சி வந்து தான் பஸ் பிடித்து செல்லவேண்டும். அதனால் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்த பகுதி தினமும் 'பிசி'யாகவும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பியும் காணப்படும்.

                     ஆண்டிமடம், திட்டக்குடி, விருத்தாசலம் செல்லும் சாலைகள் பிரிந்து செல்வதால் இப்பகுதி மும்முனை சந்திப்பாக உள்ளது. ஆண்டிமடம் செல்பவர்கள் விருத்தாசலம்- ஆண்டிமடம் சாலையின் கிழக்கு புறத்திலும், திட்டக்குடி செல்பவர்கள் திட்டக்குடி சாலை பிரியும் இடத்திலும், விருத்தாசலம் செல்பவர்கள் விருத தாசலம் - ஆண்டிமடம் சாலையின் மேற்கு புறத்திலும் நின்று பஸ் ஏறிச் செல் கின்றனர். 

                  இந்த மூன்று பஸ் நிறுத்தங்களிலுமே நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயில் நேரத்தில் ஒதுங்கி நிற்க இடமின்றி அவதியடைகின்றனர். அதுமட்டுமின்றி போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் காத்திருக்கும் பயணிகள் அச்சமடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கருவேப்பிலங்குறிச்சியில் பஸ்கள் நின்று செல்லும் மூன்று இடங்களிலும் நிழற்குடை, மின் விளக்குகள் அமைக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior