உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

போலி மருந்து வழக்கில் கைதானவர்களிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., மனு

 கடலூர்: 

                         கடலூரில் 'பெனட்ரில்' இருமல் சிரப் போலியாக தயாரித்த சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண் டனர். இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஏஜன்சி உரிமையாளர் வள்ளியப்பன் கடந்த 24ம் தேதி கடலூர் கோர்ட்டில் சரணடைந்தார்.அவரை, போலீசார் கோர்ட் அனுமதி பெற்று தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், வள்ளியப்பனுக்கு உதவிய அவரது நண்பர் ஆனந்த் (34), மருந்து விற்பனை பிரதிநிதி முருகேசன் (31) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 35 ஆயிரம் போலி 'பெனட்ரில் சிரப்' பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

                         இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருந்துகள் மற்றும் காலாவதி மருந்து விற்பனை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்பேரில் கடலூர் மாவட்ட சி.பி. சி.ஐ.டி., பிரிவு டி.எஸ்.பி., கன்னியப்பன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் போலி மருந்து வழக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரித்தனர். அவர்களிடம் வழக்கின் கோப்புகளை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் கைது செய்து சிறையில அடைக்கப்பட்டுள்ள மூவரையும் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior