வடகிழக்குப் பருவ மழையால் கடலூர் மாவட்டத்தில் 126.86 கி.மீ. சாலைகள் சேதம் அடைந்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழை காரணமாக மாநில நெடுஞ்சாலைகள் 50.20 கி.மீ., மாவட்டத்தின் முக்கிய சாலைகள் 17.80 கி.மீ., இதரச் சாலைகள் 58.86 கி.மீ. சேதம் அடைந்துள்ளன. இவை ரூ. 27.75 லட்சத்திóல தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 3 ஆண், 2 பெண், 2 சிறுவர் ஆக மொத்தம் 7 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் 4 நபர்களுக்கு விசாரணை அடிப்படையில் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்றவர்களுக்கு, விசாரணை அடிப்படையிலும், காவல்துறை அறிக்கை, பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை என்பதாலும் மற்றும் நிவாரணம் வேண்டாம் என்று தெரிவித்ததாலும் வழங்கப்படவில்லை. 37 கால்நடைகள் இறந்துள்ளன. தகுதி அடிப்டையில் 14 இனங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 473 வீடுகள் பகுதியாகவும், 139 வீடுகள் முழுமையாகவும், பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. விசாரணை அடிப்படையில் இதுவரை 333 வீடுகளுக்கு, நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் உள்ள 253 சிறுபாசன ஏரிகளில் 76 ஏரிகள் முழுமையாகவும், 63 ஏரிகள் 75 சதவீதமும் நிரம்பி உள்ளன. 681 ஊராட்சிகளில் 3,045 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குளோரின் கலந்து சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. 436 குடிநீர் மாதிரிகளில் 396 மாதிரிகள் குடிநீர் வடிகால் வாரியத்தால் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. கடலூர் நகராட்சியில் பாதாளச் சாக்டைத் திட்டம் மற்றும் மழையினால் ஏற்பட்ட சாலைப் பாதிப்புகள் போர்க்கால அடிப்படையில் சீர்செய்யப்பட்டு வருகிறது என்றும் செய்திக் குறிப்பு
தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக