உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

ரூ.1449 கோடி ​கடன் வழங்க வங்​கி​கள் திட்​டம்

கட​லூர்,​ நவ. 18:​

கட​லூர் மாவட்​டத்​தில் அனைத்து வங்​கி​க​ளும் 2010-2011-ம் ஆண்​டில் ரூ.1449 கோடி கடன் வழங்​கத் திட்​ட​மிட்டு உள்​ளன. ​ ​ ​ நபார்டு வங்கி தயா​ரித்த கட​லூர் மாவட்​டத்​துக்​கான 2010-2011-ம் ஆண்​டுக்​கான வளம் சார்ந்த வங்​கிக் கடன் திட்​டத்தை செவ்​வாய்க்​கி​ழமை கட​லூ​ரில் நடந்த வங்​கி​யா​ளர்​கள் கூட்​டத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வெளி​யிட்​டார். 2010-2011-ம் ஆண்​டில் கட​லூர் மாவட்​டத்​தில் வங்​கி​கள் ரூ.1449 கோடி கடன் வழங்​கும் என்று மாவட்ட ஆட்​சி​யர் தெரித்​தார். ​ ​ நபார்டு வங்​கி​யின் மாவட்ட உத​விப் பொது மேலா​ளர் ராஜ​கோ​பா​லன் பேசு​கை​யில்,​ வங்​கி​யா​ளர்​கள் தயா​ரித்த நடப்பு ஆண்​டுக்​கான கடன் திட்​டத்தை விட 12.6 சதம் கூடு​த​லா​கக் கடன் வழங்​கும் வகை​யில்,​ புதிய திட்​டம் தயா​ரிக்​கப்​பட்டு இருப்​ப​தா​கத் தெரி​வித்​தார். ​ ​ 2010-2011-ம் ஆண்​டுக்​கான கடன் திட்​டத்​தில் விவ​சா​யத்​துக்கு ரூ.1001 கோடி ஒதுக்​கப்​பட்டு உள்​ளது. இது மொத்​தக் கடன் திட்​டத்​தில் 69 சதம் ஆகும். தொழில் துறைக்கு ரூ.69 கோடி​யும்,​ இதர முன்​னு​ரி​மைக் கடன்​க​ளுக்கு ரூ.379 கோடி​யும்,​ ஒதுக்​கப்​பட்டு உள்​ளது. மேலும் இது​வரை நபார்டு வங்​கி​யின் ஊர​கக் கட்​டு​மான வளர்ச்சி நிதித் திட்​டத்​தில் ரூ.215 கோடி செல​வில் கட​லூர் மாவட்​டத்​தில் 602 விரி​வாக்​கத் திட்​டங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு இருப்​ப​தா​க​வும் உத​விப் பொது​மே​லா​ளர் ராஜ​கோ​பா​லன் தெரி​வித்​தார். ​ ​ ​ வங்​கி​யா​ளர்​கள் தயா​ரிக்​குóம் 2010-2011-ம் ஆண்​டுக்​கான கடன் திட்​டம் இந்த வளம் சார்ந்த வங்​கிக் கடன் திட்​டத்​தைச் சார்ந்தே இருக்​கும் என்​றும் அவர் கூறி​னார். ​​ ​ கடன் திட்​டத்​தின் முதல் பிர​தியை மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் இருந்து சென்னை பாரத ஸ்டேட் வங்​கி​யின் துணைப் பொது மேலா​ளர் ஞான​வேல் பெற்​றுக் கொண்​டார் என்​றும்
செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior