தமிழ்நாட்டில் வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ன. சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் திருடுபோன பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விழுப்புரம் சரக டிஐஜி மாசானமுத்து, கடலூர் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஷ் ஆகியோர் உரியவர்களிடம் பொருள்களை ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து டிஐஜி மாசானமுத்து நிருபர்களிடையே தெரிவித்தது: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வந்த திருட்டு, கொள்ளை, வாகனத் திருட்டு ஆகிய குற்றங்களை கண்டுபிடிக்க சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமையின் கீழ் பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி மற்றும் டெல்டா பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அமீர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூர் மெயின்ரோட்டில் தனிப்படை போலீஸôர் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் நோக்கி வந்த காரை நிறுத்தி அதில் வந்த வடலூரைச் சேர்ந்த சிங்காரவேலு (34), கும்பகோணம் மேலகாவேரியைச் சேர்ந்த சகாபுதீன் (39) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரித்ததில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகள் கடலூரைச் சேர்ந்த அருள்பாண்டியன் (21), காட்டுமன்னார்கோவில் தெம்மூரைச் சேர்ந்த ஜெய்சங்கர் (39), நெய்வேலி வடக்குத்தைச் சேர்ந்த ரமேஷ் (23), மதுரை கிடாரிகுளத்தைச் சேர்ந்த பிரபாகரன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கும்பலின் தலைவனாக செயல்பட்ட கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் உளுந்தூர்பேட்டையில் டிப்பர் லாரி திருடப்பட்ட வழக்கில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ளார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மேற்கண்ட 9 பேர் கொண்ட கும்பல் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்த போது ஒன்று சேர்ந்து தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருச்சி, நாகை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து திருச்சி, தஞ்சை, நாகை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திருடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.35 லட்சம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக