உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

மழை பாதிப்பு குறித்து ஆய்வு

கட​லூர்,​ நவ. 19:​

கட​லூர் மாவட்​டத்​தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கி​றது. ​​ ​ வட​கி​ழக்​குப் பருவ மழை தொடங்​கி​ய​தைத் தொடர்ந்து கட​லூர் மாவட்​டத்​தில் அக்​டோ​பர் 28-ம் தேதி முதல் 15 நாள்​கள் கன மழை பெய்​தது. இத​னால் பெரும்​பா​லான ஏரி​கள் குளங்​கள் நிரம்பி விட்​டன. அணை​கள்,​ பெரிய ஏரி​கள் நிரம்பி வழிந்து ஆயி​ரக்​க​ணக்​கான கன​அடி நீர் கட​லுக்கு வீணா​கச் சென்று கொண்டு இருக்​கி​றது. அதே நேரத்​தில் முறை​யான வடி​கால் வசதி இல்​லா​த​தால் மழை​நீர் விளை நிலங்​க​ளுக்​குள் புகுந்து,​ வழக்​கம்​போல் இந்த ஆண்​டும் சேதங்​க​ளை​யும் விளை​வித்து இருப்​ப​தாக விவ​சா​யி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​ குடிசை வீடு​க​ளுக்​குள் மழை​நீர் புகுந்து ஏழை எளிய மக்​கள் பல​ரும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். வீடு​கள் பல இடிந்து விழுந்து உள்​ளன. சாலை​கள் பெரி​தும் சேதம் அடைந்து உள்​ளன. மழை பாதிப்​பு​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்​கு​வ​தற்​கான ஆய்​வுப் பணி மாவட்ட நிர்​வா​கத்​தால் முடுக்கி விடப்​பட்டு உள்​ளது. மழை​யால் உ.யிரி​ழந்​த​வர்​க​ளின் குடும்​பங்​க​ளுக்கு ரூ.1 லட்​சம் நிவா​ர​ணத் தொகை வழங்​கப்​பட இருக்​கி​றது. ​​ ​ மழை​யி​னால் 3 பேர் இறந்​துள்​ள​னர். 23 கால்​ந​டை​கள் இறந்​துள்​ளன. 675 வீடு​கள் சேதம் அடைந்து உள்​ளன. பயிர்​கள் சேதம் தண்​ணீர் வடிந்த பின்​னர்​தான் தெரி​ய​வ​ரும். ​​ ​ குறிஞ்​சிப்​பா​டியை அடுத்த பெரு​மாள் ஏரி பாச​னப் பகு​தி​க​ளில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​களை அலு​வ​லர்​கள் செவ்​வாய்​கி​ழமை ஆய்வு செய்​த​னர். மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மாவட்ட ஆட்​சி​ய​ரின் நேர்​முக உத​வி​யா​ளர் ​(விவ​சா​யம்)​ மணி,​ வேளாண் உதவி இயக்​கு​நர் அசோ​கன் மற்​றும் வரு​வாய்த்​துறை அலு​வ​லர்​கள் இந்த ஆய்வை மேற்​கொண்​ட​னர்.​ ​ மழை​யால் சேதம் அடைந்த சாலை​கள் குறித்து நெடுஞ்​சா​லைத் துறை அலு​வ​லர்​கள் கணக்​கெ​டுப்பு நடத்தி வரு​கி​றார்​கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior