உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

தன்​னம்​பிக்​கை​யோ​டு நேர்​மு​கத்​தேர்வை அணு​குங்​கள்

நெய்வேலி, நவ. 20:​

நேர்​மு​கத் தேர்வை தைரி​யத்​து​ட​னும்,​ தன்​னம்​பிக்​கை​யு​ட​னும் அணுக வேண்​டும் என வட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை துவங்​கிய வேலை​வாய்ப்பு முகா​மில் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி கேட்​டுக்​கொண்​டார்.​ ​

கட​லூர் மாவட்​டத் திமுக சார்​பில் படித்த இளை​ஞர்​க​ளுக்​கான வேலை​வாய்ப்பு முகாம் வட​லூர் வள்​ள​லார் குரு​கு​லம் மேல்​நி​லைப் பள்​ளி​யில் வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​யது. 3 நாள்​கள் நடை​பெ​ற​வுள்ள இந்த முகாமை மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​வைத்​துப் பேசி​யது:​ இந்த முகாமை நடத்த முயன்​ற​போ​தெல்​லாம் அடாத பெய்த மழை​யால 3 முறை ஒத்​தி​வைக்​கப்​பட்​டது.​ ​ பந்​தல் போடவே பெரும் போராட்​டம் என்​றா​கி​விட்​டது. இருப்​பி​னும் விடா​மல் இந்த வேலை​வாய்ப்பு முகாமை நடத்​தியே தீர​வே​ண​டும் என்ற தீரத்​து​டன் செயல்​பட்டு இன்று ஒரு​வ​ழி​யாக முகாம் தொடங்​கி​விட்​டது.​ ​ கட​லூர் மாவட்​டத்​தில் 16 இடங்​க​ளில் இருந்து விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. இதன்​மூ​லம் 54 ஆயி​ரம் பேர் இந்த வேலை​வாய்ப்பு முகா​முக்கு பதி​வு​செய்​துள்​ள​னர். வெள்​ளிக்​கி​ழமை 15 ஆயி​ரம் பட்​ட​தா​ரி​கள் முகா​மில் பங்​கேற்​றுள்​ள​னர்.​ ​ நேர்​மு​கத் தேர்​வில் பங்​கேற்​கக் கூடி​ய​வர்​கள் தைரி​யத்​து​டன்,​ தெளி​வாக பேசுங்​கள். ஒரு​வ​ருக்கு 5 வாய்ப்​பு​கள் வழங்​கப்​ப​டு​கின்​றன. அறி​மு​க​மான நிறு​வ​னத்தை மட்​டுமே தேர்ந்​தெ​டுக்​கா​தீர்​கள். பரீட்​ச​யம் இல்​லாத நிறு​வ​ன​மாக இருந்​தா​லும் அங்கே அணுகி உங்​க​ளது திற​மைக்​கேற்ப வேலையை பெற்​றுக்​கொள்​ளுங்​கள். இதன் மூலம் உங்​க​ளது வாழ்க்​கைக்​கை​யைத் தொடங்​குங்​கள் என்​றார் கனி​மொழி.​ விழா​விற்​குத் தலை​மை​வ​கித்த அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வம் பேசு​கை​யில்,​ மிகப்​பெ​ரிய அள​வில் நடை​பெ​றும் இந்த முகாமை இங்கு நடத்த தூணாக நின்ற கட்​சி​யி​ன​ருக்கு தனது பாராட்​டு​களை தெரி​வித்​துக் கொள்​வ​தா​கக் கூறி​னார்.​ விழா​வில் அமைச்​சர் தங்​கம் தென்​ன​ரசு,​ ஓபி​ஆர் கல்வி நிறு​வ​னங்​க​ளின் தாளா​ளர் செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்​ ஒருங்​கி​ணைப்​பா​ளர் போஸ்கோ,​ முகா​மில் பங்​கேற்க வந்​துள்ள ஊன​முற்​றோர்,​ கர்ப்​பிணி மற்​றும் குழந்​தை​யு​டன் வந்​தி​ருக்​கும் பெண்​க​ளுக்கு நேர்​மு​கத் தேர்வை அணுக முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என அறி​வித்​தார்.​ இந்த முகாமை முன்​னிட்டு வட​லூர் நக​ரமே தைப்​பூச தினம் போல் காட்​சி​ய​ளிக்​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior