உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

42வது நூலக வார விழா

கட ​லூர்,​ நவ.18: ​

கட​லூர் மாவட்ட மைய நூல​கத்​தில்,​ 42-வது நூலக வார விழா​வை​யொட்டி நடந்த புத்​த​கக் கண்​காட்​சியை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் திங்​கள்​கி​ழமை தொடங்கி வைத்​தார். ​​ ​ விழா​வில் நூல்​களை அறி​மு​கம் செய்​து​வைத்து பேரா​சி​ரி​யர் விஷ்​ணு​தா​சன்,​ புல​வர் ராம​லிங்​கம் ஆகி​யோர் பேசி​னர். முதல் நிலை நூல​கர் பச்​சை​யப்​பன்,​ ​ நூலக வாச​கர் வட்​டத் தலை​வர் தங்க.சுதர்​ச​னம் ஆகி​யோர் பேசி​னர். மாவட்ட நூலக அலு​வ​லர் அசோ​கன் வர​வேற்​றார். ​​ கட​லூர் மாவட்ட மைய நூல​கம் பற்றி தெரி​விக்​கப்​பட்ட சில தக​வல்​கள்:​ ​​ கட​லூர் மாவட்ட மைய நூல​கத்​தில் குழந்​தை​கள் பிரிவு,​ குறிப்​பு​தவி வழங்​கும் பிரிவு,​ குடி​மைப் பணி மையம்,​ நாளி​தழ்,​ சஞ்​சிகை படிப்​ப​கப் பிரிவு,​ நூல்​கள் வழங்​கும் பிரிவு,​ ​ ​ இணைய தள வச​திப் பிரிவு ​(குளிர்​சா​தன வச​தி​யு​டன்)​,​ நகல் எடுக்​கும் கரு​வி​யு​டன் கூடிய பகுதி என 8 பிரி​வு​கள் உள்​ளன. ​ ​​ மொத்த நூல்​கள் இருப்பு 1,28,430. குழந்​தை​கள் பிரிவு நூல்​கள் 7,804. மொத்த உறுப்​பி​னர்​கள் 17,773. புர​வ​லர்​கள் 121. ​2008-09ல் வாச​கர்​கள் வருகை 80,402. வழங்​கப்​பட்ட புத்​த​கங்​கள் 38,630. குறிப்​பு​தவி நூல்​கள் 59,154. ​​ மொத்த கிளை நூல​கங்​கள் 39. ஊரக நூல​கங்​கள் 16. பகுதி நேர நூல​கங்​கள் 8. ​ இணைய தள வச​தி​யு​ட​சன் கூடிய நூல​கங்​கள் மாவட்ட மைய நூல​கம்,​ கிளை நூல​கங்​கள் ​ சிதம்​ப​ரம்,​ விருத்​தா​ச​லம்,​ சேத்​தி​யாத்​தோப்பு,​ பண்​ருட்டி,​ புவ​ன​கிரி,​ காட்​டு​மன்​னார்​கோ​யில்,​ கட​லூர் முது​ந​கர்,​ கங்​கை​கொண்​டான்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior