கடலூர், நவ. 19:
புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்றனர். இத் தகவலை இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழ்மாநில பொதுச் செயலாளர் விருத்தகிரி தெரிவித்தார். கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய, புதிய முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. கரும்புக்கான நியாயமான சன்மான விலை என்ற பெயரில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு அக்டோபர் இறுதியில் பிறப்பித்து இருக்கிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாய சங்கங்கள் சார்பிóல புதுதில்லியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பசவராஜ் சம்பகே தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்த அமைப்பின் தமிழக பொதுச் செயலாளர் விருத்தகிரி, பொருளாளர் தணிகாச்சலம், புதுவை மாநிலச் செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டதாக விருத்தகிரி தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் பசவராஜ் சம்பகே, இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக