ரூ. 8.21 லட்சம் காசோலை கொடுத்து மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரியைப் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). அவரது மனைவி திலகம் (48). இருவரும் பல்வேறு இடங்களில் இருந்து அரிசி வாங்கி மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் கடலூரை அடுத்த பெரிய பிள்ளையார் மேடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் இருந்து ரூ. 8.21 லட்சம் மதிப்பிலான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளனர். அதற்காக கிருஷ்ணமூர்த்தி ரூ. 8.21 லட்சத்துக்குக் வங்கிக் காசோலை அளித்துள்ளார். மனைவி பெயரில் இருந்த கணக்கில் இருந்து ராமச்சந்திரன் என்பவர் பெயரில் அந்தக் காசோலை அளிக்கப்பட்டு இருந்ததாம், ஆனால் காசோலையை அரிசி ஆலை உரிமையாளர் துரைராஜ் வங்கியில் சமர்ப்பித்தபோது, காசோலை வழங்கப்பட்ட வங்கிக் கணக்கு நிலுவையில் இல்லை என்று திரும்பியது. இதுகுறித்து துரைராஜ் கடலூர் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் போலீஸ் பிரிவில் புகார் செய்தார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரது மனைவி திலகத்தைத் தேடி வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக