கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10-30 மணிக்கு மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்திóல் நடைபெறும். முதல் நிகழ்வாக விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளால், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து வேளாண் இணை இயக்குநரால் திட்டப் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். பின்னர் விவசாயிகள் வேளாண் சார்ந்த குறைகளைத் தெரிவிக்காலம். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய, விளக்கமான பதில் அளிக்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக