பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தினர் கடலூரில் வியாழக்கிழமை உணணாவிரதம் . சென்னை சி.டி.எஸ். பகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 ஒப்பந்த் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கார்ப்ரேட் அலுவலக வழிகாட்டுதலின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து இ.பி.எஃப்., இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. மாவட்டப் பொதுமேலாளர் அலுவலகம் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஐ.எம்.மதியழகன் தலைமை தாங்கினார். கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்மைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதாவாணன் தொடங்கி வைத்துப் பேசினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அண்ணாமலை உள்ளிட்ட பலர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். கோரிக்கைகளை விளக்கி தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, முத்துவேல், ஜி.கோவிந்தராஜுலு, எஸ்.பழநி, பி.ராஜேந்திரன், என்.முகமது இக்பால், கே.வெங்கட்ரமணன் ஆகியோர் பேசினர். மாவட்ட அமைப்புச் செயலாளர் சாரங்கபாணி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக