உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

கிராம மக்​கள் சாலை மறி​யல்

பண் ​ருட்டி,​ நவ. 20:​

தள​வா​டப் பொருள்​கள் வந்​தி​றங்கி ஒராண்​டா​கி​யும் மின்​மாற்றி அமைக்​கா​த​தால் ஆத்​தி​ரம் அடைந்த கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் கிராம மக்​கள் வெள்​ளிக்​கி​ழமை சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ ​

பண்​ருட்டி வட்​டம் அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யம் பூண்டி ஊராட்​சி​யைச் சேர்ந்​தது கட்​ட​முத்​துப்​பா​ளை​யம்,​ இக்​கி​ரா​மத்​தில் சுமார் 5 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​டோர் வசித்து வரு​கின்​ற​னர். ​​ ​ இக்​கி​ரா​மத்​தில் உள்ள மின்​மாற்​றி​யில் இருந்து மின் அழுத்​தம் குறை​வாக கிடைப்​ப​தால்,​ வீடு​க​ளில் மின் விளக்​கு​கள் வெளிச்​சம் குறை​வாக உள்​ளது . மின் மோட்​டார்​கள் இயங்​கா​த​தால் குடி​நீர் தட்​டுப்​ப​டும்,​ விவ​சாய நிலத்​திற்கு தண்​ணீர் பாய்ச்​சு​வ​தும் பாதிக்​கப்​பட்டு பொது மக்​கள் அவதி அடைந்து வந்​த​னர்.இது குறித்து தக​வல் அறிந்த மின்​வா​ரி​யம் இப்​ப​கு​தி​யில் மற்​றொரு மின்​மாற்​றியை அமைக்க தேவை​யான தள​வா​டப் பொருள்​களை இறக்கி மின்​மாற்றி அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டது.​ ​ இந்​நி​லை​யில் மின்​கம்​பம் நட​வுள்ள சாலை புறம்​போக்கு இடத்தை ஆக்​கி​ர​மித்து வைத்​துள்​ள​தா​கக் கூறப்​ப​டும் முன்​னாள் கிராம நிர்​வாக அலு​வ​லர் ராஜா​ராம் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் மின்​மாற்றி அமைக்​கும் பணி கிடப்​பில் போடப்​பட்​டது.இது தொடர்​பாக கிராம மக்​கள் மாவட்ட ஆட்​சி​யர்,​ வட்​டாட்​சி​யர் ஆகி​யோ​ருக்கு பல​முறை மனு அளித்​தும் எந்த பல​னும் ஏற்​ப​ட​வில்லை.​ ​ ​ இத​னால் ஆத்​தி​ரம் அடைந்த கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் கிராம மக்​கள் பூண்டி ஊராட்சி மன்​றத் தலை​வர் ஜெ.குமார்,​ அதி​முக பிர​மு​கர் கரு​ணா​க​ரன் ஆகி​யோர் தலை​மை​யில் எல்.என்.புரம் மின்​சார வாரிய அலு​வ​ல​கம் முன்,​ சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் சாலை மறி​யல் ஈடு​பட்​ட​னர்.​ ​ இது குறித்து தக​வல் அறிந்த வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ மின்​சார வாரிய உதவி செயற் பொறி​யா​ளர் சாய்​சுப்​பி​ர​ம​ணி​யன் ஆகி​யோர் பொது மக்​க​ளி​டம் சம​ர​சம் பேசி,​ கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் சென்று பிரச்​னைக்​கு​றிய இடத்​தைப் பார்​வை​யிட சென்​ற​னர். இத​னைத் தொடர்ந்து பொது மக்​கள் சாலை மறி​ய​லைக் கைவிட்​ட​னர். இத​னால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் 45 நிமி​டம் போக்​கு​வ​ரத்து தடை​பட்​டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior