கொள்ளையடிப்பதற்காக கூட்டு சதியில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 4 பேரை சப்-இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கியை போலீஸôர் பறிமுதல் செய்தனர். திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை பிடிக்கவும் சப்-இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் தலைமையிலான தனிப்படையை மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின்கோட்னீஷ் அமைத்துள்ளார். இந்நிலையில் தனிப்படை போலீஸôர் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் விருத்தாசலம் பகுதியில் மணிமுத்தாறு செல்லியம்மன்கோவில் பின்புறம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையடிப்பதற்காக கூட்டு சதியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் கொக்கரசன்பேட்டையைச் சேர்ந்த தியாகராஜன் (36), தமிழர் விடுதலைப்படை இயக்கத்தில் உள்ள விருத்தாசலத்தைச் சேர்ந்த அசோக்குமார் (28), அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த கருக்கை ஜெயக்குமார் (26), விருத்தாசலம் பழமலைநாதர் நகரைச் சேர்ந்த ஆனந்தன் (21) ஆகிய 4 பேரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றையும் போலீஸர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக