சிதம்பரம், நவ. 18:
சிதம்பரத்தை அடுத்த முகையூர் கிராமத்தில் தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை இடித்து உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு சிதம்பரம் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை பொக்லைனுடன் கட்டடத்தை ஊழியர்கள் இடிக்கச் சென்றனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் இருந்ததால் அலுவலகக் கட்டடம் இடிப்பது ஒத்தி வைக்கப்பட்டது. சிதம்பரத்தை அடுத்த முகையூர் கிராமத்தில் பொன்முடி என்பவரது மனைவி மல்லிகா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கீரப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகமும், ஊராட்சி அலுவலகமும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிதம்பரம் நீதிமன்றத்தில் மல்லிகா வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை முடிவுற்று கடந்த 28-2-2006-ல் அலுவலகக் கட்டடத்தை இடித்து நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் இதுவரை அந்த இடத்தை கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்படைக்காததால் ஜப்தி செய்து ஒப்படைக்குமாறு மனுதாரர் மல்லிகா சிதம்பரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி சாந்தி அலுவலகக் கட்டடத்தை இடித்து உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் புதன்கிழமை நீதிமன்ற ஊழியர்கள் கட்டடத்தை இடிக்க பொக்லைனுடன் சென்றனர். கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் சென்றிருந்ததால் இடிப்பதை ஒத்திவைத்து திரும்பினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக