உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

லண்​ட​னில் தமி​ழக சுற்​று​லாத்​துறை

சிதம் ​ப​ரம்,​ நவ.19:​

லண்​டன் மாந​க​ரத்​தில் ஆண்​டு​தோ​றும் நவம்​பர் மாதம் 2-வது வாரத்​தில் ரர்ழ்ப்க் பழ்​ஹஸ்ங்ப் ஙஹழ்ற்​ என்ற பெய​ரில் மாபெ​ரும் உலக சுற்​றுலா சந்தை நடை​பெற்று வரு​கி​றது. இந்த அண்டு நவம்​பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இது நடை​பெற்​றது.​ ​ இதில் 100க்கும் மேற்​பட்ட நாடு​கள் பங்​கேற்று தங்​க​ளு​டைய நாட்​டில் உள்ள சுற்​றுலா ஸ்த​லங்​க​ளை​யும்,​ சுற்​றுலா சம்​மந்​தப்​பட்ட தொழில்​க​ளுக்​கான விற்​பனை ஒப்​பந்​தங்​க​ளை​யும்,​ விளம்​பர தக​வல்​க​ளை​யும் பரி​மா​றிக் கொள்​கின்​றன. இந்த ஆண்டு இந்​திய சுற்​று​லாத்​துறை ஐச​ஈ​ஐஅ டஅ​ய​ஐ​க​ஐ​ஞச​ என்ற பெய​ரில் பெரிய அரங்கை அமைத்து இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநி​லங்​க​ளின் சுற்​றுலா அரங்கை அமைத்​தி​ருந்​தது. தொடக்​க​நா​ளன்று இந்​தி​யச் சுற்​றுலா அரங்கை மத்​திய சுற்​று​லாத்​துறை அமைச்​சர் குமா​ரி​செல்ஜா துவக்கி வைத்​தார்.​ ​ இதில் முக்​கி​ய​மாக தமி​ழ​கத்​தின் புகழ்​பெற்ற சுற்​றுலா ஸ்த​லங்​க​ளான ஸ்ரீந​ட​ரா​ஜர் கோயில்,​ கங்​கை​கொண்​ட​சோ​ழ​பு​ரம்,​ தஞ்சை பெரி​ய​கோ​வில்,​ மதுரை மீனாட்சி அம்​மன் ​ கோயில் ஆகி​ய​வற்றை முன்​னி​றுத்தி அரங்​கு​களை அமைத்து விளம்​ப​ர​ப​டுத்​தி​யது. மேலும் தமி​ழ​கத்​தில் உள்ள சுற்​றுலா செல்​லக்​கூ​டிய மலைப்​ப​கு​தி​கள்,​ கடற்​க​ரை​கள்,​ பட​குக் குழாம்​கள்,​ பற​வை​கள் சர​ணா​ல​யம் உள்​ளிட்ட வெளி​நாட்​டுப் பய​ணி​களை ஈர்க்​கும் வண்​ணம் அரங்​கு​களை அமைத்​தி​ருந்​தது.​ ​ தமி​ழ​கத்​தின் சார்​பில் சுற்​று​லாத்​துறை அமைச்​சர் சுரேஷ்​ரா​ஜன்,​ ஆணை​யர் மோகன்​தாஸ் மற்​றும் தமி​ழ​கத்​தில் உள்ள பிர​பல ஹோட்​டல் அதி​பர்​கள்,​ சுற்​றுலா முக​வர்​கள் பங்​கேற்​ற​னர். இச்​சந்​தை​யில் சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ராம் நிர்​வாக இயக்​கு​நர் ஆர்.எம்.சுவே​த​கு​மார் பங்​கேற்று சிதம்​ப​ரம் நக​ரத்​தை​யும்,​ நட​ரா​ஜர் ஆல​யம்,​ பிச்​சா​வ​ரம் மற்​றும் அத​னைச் சுற்​றி​யுள்ள சுற்​றுலா ஸ்த​லங்​கள் குறித்து வெளி​நாட்டு சுற்​றுலா முக​வர்​கள்,​ பிர​தி​நி​தி​கள்,​ பய​ணி​கள் ஆகி​யோ​ருக்கு எடுத்​து​ரைத்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior