உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

ஊரை​விட்டு ஒதுக்​கப்​பட்ட தலித் குடும்​பம்

சிதம் ​ப​ரம்,​ நவ. 20:​

சிதம்​ப​ரம் அருகே தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த விரி​வு​ரை​யா​ளர் குடும்​பத்​தி​னர் ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​னர். இது​கு​றித்து அவ்​வி​ரி​வு​ரை​யா​ளர் கிள்ளை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.​ ​

சிதம்​ப​ரத்தை அடுத்த கொடிப்​பள்​ளம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் த.சர​வ​ணக்​கு​மார் சமு​தா​யத்​தைச் சேர்ந்த இவர் அண்​ணா​ம​லைப் பல்​க​லை​யில் பொரு​ளா​தா​ரத் துறை​யில் விரி​வு​ரை​யா​ள​ராக உள்​ளார். இவர் கொடிப்​பள்​ளம் அருகே உள்ள பின்​னத்​தூர் மேற்கு கிரா​மத்​தைச் சேர்ந்த ஒளி​மு​க​மது என்​ப​வ​ருக்​குச் சொந்​த​மான நிலத்தை 2005-ம் ஆண்டு முதல் குத்​த​கைக்கு எடுத்து பயி​ரிட்டு வந்​துள்​ளார். அந்த நிலத்தை ஒளி​மு​க​மது ​ விற்க முன்​வந்த போது அதை சர​வ​ணக்​கு​மார் விலை கொடுத்து வாங்​கி​யுள்​ளார்.​ இந்​நி​லை​யில் அக்​கி​ரா​மத்​தைச் சேர்ந்த சிலர் அந்த நிலத்தை ஊர் மக்​க​ளுக்கு இல​வச வீட்​டு​ம​னைப்​பட்​டா​வாக வழங்க தரு​மாறு கேட்​ட​னர். அதற்கு சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​தால் கிராம பஞ்​சா​யத்​துக்கு அழைத்து இந்த நிலத்தை ஊருக்​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் எனக்​கோ​ரி​னர். அதற்கு சர​வ​ணக்​கு​மார் "எனது தலை​மு​றை​யில் முதல்​மு​றை​யாக நிலம் வாங்​கி​யுள்​ளேன். அரு​கா​மை​யில் வேறு நிலங்​கள் உள்​ளன. அதை வாங்​கிக் கொள்​ளுங்​கள்' எனக்​கூ​றி​விட்டு சென்​ற​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. ​ இந்​நி​லை​யில் இம்​மா​தம் 17ம் தேதி செவ்​வாய்க்​கி​ழமை ஊர் பஞ்​சா​யத்து கூட்​டப்​பட்டு சர​வ​ணக்​கு​மார் வீட்​டுக்கு யாரும் செல்​லக்​கூ​டாது,​ கடை​க​ளில் மளி​கைப் பொருள்​களை கொடுக்​கக்​கூ​டாது. யாரும் உறவு வைத்​துக் கொள்​ளக்​கூ​டாது. மீறி​னால் ​ ரூ.5 ஆயி​ரம் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என உத்​த​ர​வி​டப்​பட்​ட​தாக கூறப்​ப​டு​கி​றது. ​இது​கு​றித்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்' என்று கிள்ளை காவல் நிலை​யத்​தில் சர​வ​ணக்​கு​மார் வியா​ழக்​கி​ழமை புகார் அளித்​தார். கிள்ளை போலீ​ஸôர் புகா​ரைப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர். ​ இது​கு​றித்து சென்னை மனித உரிமை ஆணை​யம்,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர்,​ ஆதி​தி​ரா​விட நலத்​துறை செய​லா​ளர் ஆகி​யோ​ருக்​கும் கடி​தம் அனுப்​பி​யுள்​ள​தாக சர​வ​ணக்​கு​மார் தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior