சிதம்பரம் அருகே தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் முக்கியக் குற்றங்களை கண்டுபிடிக்கவும், தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ், சப்-இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் தலைமையிóல் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தார். இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்த திருமுட்டம் போலீஸ் சரகம் கொக்கரசன்பேட்டை கிராமத்தில் துப்பாக்கி மற்றும் வீச்சரிவாளுடன் தங்கியிருந்த தியாகராஜன் என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் தலைமையிலான தனிப்படையினர் வியாழக்கிழமை பிடித்தனர். தியாகராஜன் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீஸôர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிடிபட்டவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் மேலும் சிலர் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக