கடலூர், டிச.8:
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை 1.98,691 பேர் அதன் மூலம் பயன் அடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் அருகே பச்சையாங்குப்பம், வெள்ளக்கரை, குமளங்குளம், ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 7,142 பேருக்கு இலவச கலர் டி.வி.யை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாக்களில் வழங்கினார்.
வெள்ளக்கரை ஊராட்சியில் ரூ. 13 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை அமைச்சர் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பேசியது:
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 565 ஊராட்சிகளில் 2,99,867 இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்பட்டு உள்ளன. 48,358 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 7,156 பேருக்கு 2,894 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டு உள்ளது. 6,492 மாணவர்களுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை கிள்ளை இணைப்புப்பாலம் ரூ. 9 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ் வாகனம் 40 ஆயிரம் பிரசவங்களுக்கு உதவி இருக்கிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் ரூ. 52 கோடி செலவிடப்பட்டு உள்ளது. 1.27 கோடி குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.
அ ரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 110 கோடியில் உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
விழாக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் விஜயராகவன், சாமிக்ண்ணு, கடலூர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக