பண்ருட்டி, டிச. 5:
பண்ருட்டி வட்டம் நடுப்பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி வட்டம் மாளிகம்பட்டு ஊராட்சியில் உள்ள நடுப்பிள்ளையார்குப்பம், புதுபிள்ளாயார்குப்பம், பழைய பிள்ளையார்குப்பம் ஆகிய கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் ரேஷன் பொருள்கள் வாங்க 2 கீ.மி. தொலைவில் உள்ள மாளிகம்பட்டு கிராமத்துக்கு சென்று வந்தனர். இதனால் தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று நடுப்பிள்ளையார் குப்பத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா ஊராட்சி மன்றத் தலைவர் கே.வரதராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க சார் பதிவாளர் எஸ்.ராகவன் கலந்துக்கொண்டு முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக